உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் கூட்டத்தில் சிக்கி காயமடைந்தனர்.இதனால் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் மீட்புப் பணியாளர்களின் உதவியுடன் மீட்கப்பட்டனர்.
மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போடப்பட்டிருந்த தடுப்புகள் உடைந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய மத விழாக்களில் ஒன்றான கும்பமேளா 6 வாரங்கள் நடைபெறும். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இன்று புதன்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு கும்பமேளாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர்.