சிங்கப்பூர் முழுவதும் மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் 12 நாட்கள் தொடர் சோதனை நடத்தினர்.
இந்த தொடர் சோதனையில் சுமார் 600,000 சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்று தெரிவித்தது.
இந்த சோதனையின் போது, 14 வயதுடைய சிறுவர்கள் இரண்டு பேரை போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக அதிகாரிகள் கைது செய்தனர்.
14 வயதுடைய ஒரு சிறுவன் கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி அன்று மதியம் Yishun street 51-ல் கைது செய்யப்பட்டான்.
14 வயதுடைய மற்றொரு சிறுவன் அதே நாள் மாலை அதிகாரிகளால் நடத்தப்பட்ட தொடர் சோதனையில் அவனது 22 வயது சகோதரனுடன் Canberra street அருகில் ஒரு வீட்டில் பிடிப்பட்டனர்.அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக சுமார் 134 குற்றவாளிகள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுத்தமான ஹெராயின் போதைப்பொருளை 15 கிராமுக்கு மேல் கடத்திய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடும் .