சீனா மீதான 125% வரிகள் ஸ்மார்ட் போன் மற்றும் கணினிகளுக்கு கிடையாது-திரு.டிரம்ப்

சீனா மீதான 125% வரிகள் ஸ்மார்ட் போன் மற்றும் கணினிகளுக்கு கிடையாது-திரு.டிரம்ப்

சீனா மீதான வரிகள் சில பொருட்களுக்குப் பொருந்தாது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

இதில் திறன்பேசிகள்,கணினிகள் மற்றும் சில மின்னணு பொருட்கள் ஆகியவை அடங்கும் என்று
திரு.டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா சமீபத்தில் சீன இறக்குமதிகளுக்கு 125 சதவீத வரிகளை விதித்தது.

உலகளவில் இறக்குமதிகளுக்கு 10 சதவீத அடிப்படை வரி விதிக்கப்பட்டது.

இது தைவானில் இருந்து குறைக்கடத்திகள் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆப்பிள் ஐபோன்களுக்கான இறக்குமதி செலவுகளைக் குறைக்கிறது.

நேற்று முன்தினம், எந்தெந்த பொருட்கள் புதிய வரிகளுக்கு உட்பட்டவை அல்ல என்பதை கோடிட்டுக் காட்டும் அறிக்கையை அதிகாரிகள் வெளியிட்டனர்.

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் சாதனங்களில் பல சீனாவில் தயாரிக்கப்படுவதாகக் கூறியுள்ளன.

திரு. டிரம்ப் அறிவித்த கூடுதல் கட்டணங்கள் சாதனங்களின் விலையை உயர்த்தக்கூடும் என்று அவர்கள் கவலை தெரிவித்தனர்.

புதிய கட்டணங்கள் குறைக்கடத்திகள், சூரிய மின்கலங்கள், நினைவக சில்லுகள் போன்றவற்றுக்குப் பொருந்தாது.

இருப்பினும், அனைத்து சீன மின்னணு பொருட்களும் 20 சதவீத வரிக்கு உட்பட்டவை.

இந்த வரிச் சலுகை, அதிக நிறுவனங்கள் உற்பத்தியை அமெரிக்காவிற்கு மாற்றுவதற்கு கூடுதல் அவகாசம் அளிக்கும் என்று வெள்ளை மாளிகை நம்புகிறது.