சிங்கப்பூரில் அதிரடி சோதனையில் பிடிபட்ட 11 பேர் கைது..!!!

சிங்கப்பூரில் அதிரடி சோதனையில் பிடிபட்ட 11 பேர் கைது..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாத இறுதியில் 2 நாட்கள் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் இவர்கள் பிடிபட்டனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அங் மோ கியோ மற்றும் ஜூரோங் – உட்லண்ட்ஸ் மாவட்ட காவல் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பொது பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் இரவு நேர பொழுதுபோக்கு மையங்கள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையானது மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 100 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஒரு கும்பலில் உறுப்பினராக இருப்பது கண்டறியப்பட்டால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 5,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

 

Follow us on : click here 👇👇

Instagram id : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook id : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram id : https://t.me/tamilansg