100 அடி உயரமுள்ள தேர் சரிந்தது!! ஒருவர் பலி!!

100 அடி உயரமுள்ள தேர் சரிந்தது!! ஒருவர் பலி!!

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் 100 அடி உயரமுள்ள கோவில் தேர் சரிந்து விழுந்தது.ஸ்ரீ மதுரம்மா கோவில் திருவிழாவின் போது இந்த துயரச் சம்பவம் நேர்ந்தது.

இந்த சம்பவத்தில் 24 வயதுடைய நபர் உயிரிழந்தார்.மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.அவர்களில் 16 வயதுடைய பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளி வந்துள்ளது.

மீதமுள்ள இருவரும் ஆபத்தான நிலையில் இல்லையென்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக காவல்துறை கூறியது.

பக்தர்கள் தேரை இழுக்கும்போது ஒரு பக்கமாக சாய்ந்தது.

ஒவ்வொரு வருடமும் திருவிழா நடைபெறும்.அதேபோல இவ்வாண்டும் நடந்தது.இரண்டு தேர்கள் இழுக்கப்பட்டது.

சிக்கா நாகமங்கலா எனும் பகுதியில் ஒரு தேர் விழுந்தது.இதனால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இரண்டாவது தேர் கனத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக ராயசண்டரா எனும் பகுதியில் சாய்ந்தது.

100 ஆண்டு வரலாற்றில் இது போன்ற சம்பவம் நடந்தது இல்லை என்றும் ,இதுவே முதல்முறை என்றும் ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.