ஆந்தை பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்..!!!

ஆந்தை பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்..!!!

உழவனின் நண்பன் என அழைக்கப்படும் ஆந்தை, பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகள் மற்றும் எலிகளை உணவாக உட்கொள்கிறது.ஆந்தை என்றாலே அபசகுணம் என்ற மூடநம்பிக்கை இன்றளவும் பல இடங்களில் காணப்படுகின்றன.வட இந்தியாவிலும் கூட ஆந்தையை கண்டாலே விரட்டி அடிப்பவர்கள் உண்டு. எனவே ஆந்தை இனத்தை பாதுகாப்பதற்காக ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஆந்தைகள் பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆந்தைகள் பற்றிய தகவல்கள்…

▪ உலகில் சுமால் 200 வகையான ஆந்தைகள் உள்ளன.

▪ ஆந்தையின் சராசரி ஆயுட்காலம் சுமார் 20 முதல் 30 ஆண்டுகள் ஆகும்.

▪ ஆந்தை அதன் நெகிழ்வான கழுத்தை 270 டிகிரி வரை நகர்த்தும் திறன் கொண்டது.

▪ ஆந்தைகளுக்கு பற்கள் இல்லை.அது தன் முழு இறையையும் அப்படியே விழுங்கும்.

 ▪ பிளாங்கிஸ்டனின் மீன் ஆந்தை உலகிலேயே மிகப்பெரியது.

▪ ஆந்தைக்கு பார்வை திறன் அதிகமாக உள்ளதால் தொலைவில் உள்ள பொருட்களை கூட அதனால் பார்க்க முடியும்.

▪ ஆந்தையின் கண்ணிமைகள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை இமைகளை அசைக்க தூங்க மற்றும் கண்களை சுத்தம் செய்ய பயன்படுகின்றன.

▪ ஆந்தையின் கேட்கும் திறன் அதிகம். இதனால் சத்தத்தை வைத்தே துல்லியமாக வேட்டையாடும் திறன் கொண்டது.

▪ கிரேக் இனத்தைச் சேர்ந்த ஆந்தை மற்ற ஆந்தையை வேட்டையாடி உணவாக உட்கொள்ளும்.

▪ ஆந்தைகள் இரவில் சுறுசுறுப்பாக வேட்டையாடுகின்றன.