சிங்கப்பூரில் ஒரு தனிமனிதனுக்கு ஒரு நாள் செலவு $10? இது எப்படி சாத்தியம்?

சிங்கப்பூரில் ஒரு நாள் சாப்பாடு மற்றும் போக்குவரத்து செலவு வெறும் $10 டாலர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆச்சரியம்! ஆனால் உண்மை. 27 வயது மதிக்கத்தக்க மலேசிய சிவில் இன்ஜினியர் Jonathan Lim என்பவர் தனது டிக்டாக் அக்கவுண்டில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் இது எப்படி சாத்தியம் என்பதை கூறியுள்ளார். அந்த ஒரு வீடியோவுக்கு மட்டும் சுமார் 64,000 views கிடைத்தது.

அந்த வீடியோவின் முடிவில் 10 சிங்கப்பூர் டாலர் ஒரு தனிமனிதனுக்கு ஒரு நாள் செலவிற்கு தாராளமாக போதும் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இந்த வீடியோ சிங்கப்பூரில் வேலை செய்ய நினைக்கும் அனைவருக்கும் உதவியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இவர் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே சிங்கப்பூரில் தங்கி வேலை பார்க்கிறார். அப்போது budget hostels-ல் மட்டுமே தங்குவார். மீதி நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்வார்.