சிங்கப்பூரில் நாய்க்கு பெல்ட் போடாததால் 1.80 லட்சம் அபராதமா?

சிங்கப்பூரில் நாய்க்கு பெல்ட் போடாததால் 1.80 லட்சம் அபராதமா?

சிங்கப்பூரில் 61 வயதுடைய Ng Lai Beng என்பவர் ஜப்பானிய ஸ்பிட்ஸ் நாயை வெளியே கூட்டி செல்லும் போது நாய்க்கான காலரை அணியத் தவறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 3,000 சிங்கப்பூர் டாலர் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

நாய்களுக்கு காலரை அணியும் விதியைப் பின்பற்றுமாறு பலமுறை நினைவூட்டால் கடிதங்கள், எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டது.

ஆனால் அவர் மதிக்கவில்லை.

சிங்கப்பூரில் நாய்களை வெளியே நடக்க கூட்டிச்செல்லும்போது கண்டிப்பாக காலர் அணிந்து வெளியே கூட்டி செல்ல வேண்டும். இந்த விதியை மீறினால் $5000 அபராதம் விதிக்கப்படும்.

அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையைச் செலுத்த தவறினால் 4 வாரங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படும்.

அவருடைய வாதத்தை நீதிமன்றத்தில் முன்வைத்தார்.

அவருடைய நாய்க்கு நன்கு பயிற்சி அளித்திருப்பதாக கூறினார். மற்ற நாய்களைப் போல் இல்லை என்றும் கூறினார்.ஆனால் அவரின் வாதம் ஏற்கப்படவில்லை.