நடிகர் என நம்பி 325,000 யூரோவை இழந்த பெண்கள்…!!!

நடிகர் என நம்பி 325,000 யூரோவை இழந்த பெண்கள்...!!!

ஸ்பெயினில் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் என்று கூறி இரண்டு பெண்களை ஏமாற்றியதாகக் கருதப்படும் 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இரண்டு பெண்களும் மோசடி செய்பவர்களிடம் €325,000 இழந்தனர்.

சந்தேக நபர்கள் பிராட் பிட் ரசிகர்களின் பக்கம் மூலம் பெண்களை தொடர்பு கொண்டனர்.

இணையம் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் மூலம் அவரை போன்று ஆள்மாறாட்டம் செய்து மோசடி வேலையில் ஈடுபட்டதாக ஸ்பெயின் போலீசார் தெரிவித்தனர்.

இரண்டு பெண்களும் போலி முதலீட்டுத் திட்டங்களில் பணத்தைப் போடுமாறு வலியுறுத்தப்பட்டனர்.

பிறகு பெண்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரணை நடத்தியது.

சந்தேகநபர்கள் அண்டலூசியா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீசார் 5 வீடுகளில் சோதனை நடத்தி பல்வேறு மொபைல் போன்கள், வங்கி அட்டைகள் மற்றும் இரண்டு கணினிகளை கைப்பற்றினர்.

பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களுக்கும் இழந்த பணத்தில் 85,000 யூரோக்களை அதிகாரிகள் மீட்டு தந்ததாக கூறப்படுகிறது.

 

Follow us on : click here ⬇️